செல்வபெருந்தகைக்கு எதிராக சதி.. பின்னணியில் கே.எஸ்.அழகிரி!!

0
121
Conspiracy against Selvaperunthakai.. KS Alagiri in the background!!
Conspiracy against Selvaperunthakai.. KS Alagiri in the background!!

DMK CONGRESS: திமுக சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி கூட்டணி குறித்த பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியிலிருக்கும் விசிக எங்களுக்கு 2 சீட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பியது. இதனை தொடர்ந்து திமுகவில் உட்கட்சி பூசலை அதிகரிக்கும் விதமாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முதலமைச்சர் ஸ்டாலின் சமூக நீதியை கடைப்பிடிப்பவராக இருந்தால் மீதமிருக்கும் 6 மாத காலத்திற்க்காவது திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று கூறி கூட்டணி கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தினர்.

இதன் சூடு கூட தணியாத சமயத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆட்சியிலும் பங்கெடுப்போம், அதிக தொகுதிகளையும் கேட்போம் என்று கூறியிருந்தார். இதனால் திமுகவில் விவாதம் தீவிரமடைந்தது. ஆனால் தற்போதைய காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை காங்கிரஸ் தொண்டர்கள், ஆதரவாளர்களின் விருப்பத்தை அறிந்தும் காங்கிரஸ் நிர்வாகியாக இல்லாமல் திமுக பக்கமே நிற்கிறார் என்றும் சிலர் விமர்சித்து வந்தனர்.

இதனை தொடர்ந்து செல்வபெருந்தகையை பதவியிலிருந்து நீக்க கோரி காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் டெல்லி சென்றனர் என்ற தகவலும் வந்தது. இதன் பின்னணியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தான் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அதிமுக பிரச்சாரத்தில் எப்போதுமில்லாமல் செல்வபெருந்தகையை இபிஎஸ் குறி வைத்து பேசி வருவது காங்கிரஸ் தலைவர்கள் அவரின் பின்னால் இருப்பதை உறுதி செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

Previous articleகூட்டணிக்கு அடித்தளமிட்ட வைகோ.. விஜய்க்கு வரவேற்பு!!
Next article41 மரணங்களுக்கு தமிழக அரசு தான் காரணம்.. வாதத்தை முன் வைத்திருக்கும் விஜய்!!