இலங்கையில் வரலாறு காணாத விலை உயர்வை அத்தியாவசிய பொருட்கள் சந்தித்திருக்கின்றது. காய்கறி உள்ளிட்ட அன்றாட தேவைப்படும் பொருட்களின் விலை அந்த நாட்டில் விண்ணை முட்டும் அளவிற்கு எட்டியிருக்கிறது.
அத்தியாவசிய பொருட்களின் விலையை இந்த நிலையிலிருக்கிறது என்றால் ஆபரண பொருட்களின் விலை என்னவென்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன? ஆகவே அந்த நாட்டு மக்கள் அந்த நாட்டின் அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான போராட்டங்களில் இறங்கியிருக்கின்றன.
பல மாதங்களாக இந்த போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன, இலங்கையின் இந்த நிலைக்கு அந்த நாட்டின் வெளியுறவு கொள்கை தான் காரணம் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள். அதாவது அந்த நாடு சீனாவிடம் அளவுக்கதிகமாக கடன் பெற்றிருக்கிறது என்றும் சிலர் தெரிவிக்கிறார்கள்.
ஆனால் சீனாவோ இலங்கையை வைத்து இந்தியாவில் எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்தி விடலாம் என்ற ஒரு நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், அந்த நாட்டில் பொது மக்களின் போராட்டம் 13வது நாளாக நீடித்து வருகிறது. இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயா இலங்கையில் அதிபர் ஆட்சி முறையை ஒழிக்க வரைவு அரசியல் சட்டத் திருத்த மசோதாவை ஏற்படுத்தியிருக்கிறது. அதனை நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாபாவிடம் சமர்பித்திருக்கிறது.
இலங்கையில் அதிபர் ஆட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும், அதற்கு பதிலாக அரசியல் சட்ட ஜனநாயகத்தை வலுப்படுத்தும் முறை அமல்படுத்தப்பட வேண்டும், என்று அந்த நாட்டின் எதிர்க்கட்சி சமர்ப்பித்துள்ள சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நாடாளுமன்றத்தில் பேசிய அந்தக் கட்சியின் தலைவர் இந்த தகவலை தெரிவித்திருக்கிறார் 1978 ஆம் வருடம் முதல் இலங்கையில் அதிபர் ஆட்சி முறை அமலில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் தலைவராகவும், முப்படை தலைவராகவும் அதிபர் நீடிப்பார் மற்றபடி பிரதமரை நியமனம் செய்யவும், நீக்கவும், அவருக்கு தனிப்பட்ட அதிகாரமில்லை.
அமைச்சரவையின் தலைவராக பிரதமர் இருப்பார் பிரதமர் ஆலோசனையின் பெயரில்தான் அமைச்சர்களை அதிபர் நியமனம் செய்வார் என்றும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் அதிபருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் 20வது அரசியல் சட்டத்திருத்தத்தை ரத்து செய்துவிட்டு அதிக அதிகாரங்களை குறைக்கக்கூடிய 19வது திருத்த சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும், அந்த சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நடுவே நாட்டின் பிரபலமான மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், உள்ளிட்டோர் இணைந்து டைரக்ஷன் ஸ்ரீலங்கா என்ற அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
அந்த அமைப்பு பிரதமரும், அதிபரும், உடனடியாக பதவி விலகி அனைத்து கட்சிகளும் அடங்கிய இடைக்கால தேசிய அரசு அமைக்க வழிவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
பொருளாதாரத்தில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களுடன் புதிய அமைச்சரவை அமைய வேண்டும் என்றும், யோசனை தெரிவித்திருக்கிறது அந்த குழு.
இதற்கு நடுவே காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியான ரம்புக்கனாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்த ஊரடங்கு நேற்று அதிகாலை 5 மணியுடன் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் பெயர் சாமந்தா லக்ஷன் என்று சொல்லப்படுகிறது. அவருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றன தன்னுடைய தந்தை போராட்டக்காரரல்ல பெட்ரோல் வாங்க சென்றபோது அவர் சுடப்பட்டதாக அவருடைய மகள் தெரிவித்திருக்கிறார்.
துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் வாசனா நவரத்னா பார்வையிட்டார். சாட்சிகளை அச்சுறுத்த வேண்டாம் என்று காவல்துறையினருக்கு அவர் உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பாக விசாரிக்க 20 பேர் கொண்ட தனிப்படை அமைத்துள்ளதாக காவல்துறையின் தரப்பு தெரிவித்துள்ளது.