+2 தேர்ச்சி பெற்ற மாணவர்களே இது உங்களுக்கான அறிவிப்பு தான்! உடனே முந்துங்கள்!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலல் தற்சமயம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இன்று கலந்தாய்வு ஆரம்பமாகிறது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு இன்று முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

12ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1.3 லட்சம் இடங்களில் சேர்வதற்கு 4 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள்.

இந்நிலையில், அவர்களுக்கான கலந்தாய்வு இன்று முதல் ஆரம்பமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.