ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தின் அடுத்தகட்ட விசாரணை! இன்று நடைபெறும் முக்கிய ஆலோசனை!

Photo of author

By Sakthi

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.அதாவது அவரை கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி இரவு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதிலிருந்து, அவர் உயிரிழந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி வரையில் பல்வேறு சர்ச்சைகள் நிறைந்த நாட்களாகவே சென்றது.

நாள்தோறும் புதுப்புது தகவல்கள் அவர் தொடர்பாக வெளியாகியது இது மேலும் சர்ச்சையை கிளப்பியது.அதோடு அப்போது சசிகலாவுக்கும், ஜெயலலிதாவின் மரணத்துக்கும், நெருங்கிய தொடர்பிருப்பதாக சொல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு ஏற்பட்ட குழப்பம் காரணமாக, பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஒன்றாக இணைந்து ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான புதிய ஆணையத்தை அமைத்து தமிழக அரசின் சார்பாக கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடமும் அந்த ஆணையம் விசாரணை செய்து வந்தது.

அதாவது, சசிகலாவின் உறவினர்கள், போயஸ் தோட்டத்தின் பணியாளர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ், அதிகாரிகள் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள், அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் என்று அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடைபெற்றது.. ஆனாலும் விசாரணை முடிவடையாத நிலையில், இந்த விசாரணை ஆணைய பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு கொண்டே வருகிறது.

இதற்கு நடுவில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக தொடரப்பட்ட வழக்கில் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் 2 ஆண்டுகள் தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவ குழு அமைத்து விசாரணை நடத்த எய்ம்ஸ் இயக்குனரகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில், எய்ம்ஸ் மருத்துவர் நிகில் தாண்டன் தலைமையில் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டது. அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக சசிகலா தரப்பு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், உள்ளிட்டவர்களிடம் ஆறுமுகசாமி இன்று ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார் அதில் காணொளி மூலமாக எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு பங்கேற்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.