தொடர் கனமழை இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை?

Photo of author

By Sakthi

தொடர் கனமழை இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை?

Sakthi

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய இலங்கை கடற்பகுதியில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.

வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், அரியலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டு இருக்கிறது. அதோடு பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரையில் மட்டுமே இன்று விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. அதே நேரம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும், நாளையும், பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.