சிறுமலையில் தொடர்ந்து பெய்யும் மழை!!! விடுதலை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதிப்பு!!!

0
98
#image_title

சிறுமலையில் தொடர்ந்து பெய்யும் மழை!!! விடுதலை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதிப்பு!!!

விடுதலை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு சிறுமலை பகுதியில் நடைபெற்று வரும் நிலையில் அங்கு தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் சூரி கதாநாயகனாகவும் நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாப்பாத்திரத்திலும் நடித்து வெளியான திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்தை இயக்குநர் வெற்றி மாறன் இயக்கியிருந்தார். விடுதலை திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. ஆனால் ரசிகர்கள் மத்தியில் விடுதலை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று போதிலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

இதையடுத்து விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சிறுமலை பகுதியில் நடைபெற்று வந்தது. இங்கு நடிகர் சூரி மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோருக்கான காட்சிகளுக்காக படப்பிடிப்பு நடந்து வந்தது.

இதையடுத்து சிறுமலை பகுதியில் தற்பொழுது தொடர்ந்து மழை பெய்து வருவதாகவும் இதனால் விடுதலை 2 திரைப்டத்தின் படப்பிடிப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

விடுதலை 2 திரைப்படத்தில் பிரபல நடிகை மஞ்சு வாரியர் அவர்கள் நடிக்கிறார். நடிகை மஞ்சு வாரியர் விடுதலை 2 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் ஏற்கனவே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.