சர்ச்சைக்கு உள்ளான தி கேரளா ஸ்டோரி திரைப்படம்!! வேண்டுகோள் வைத்த நடிகை அடா ஷர்மா!!

0
305
#image_title

சர்ச்சைக்கு உள்ளான தி கேரளா ஸ்டோரி திரைப்படம்!! வேண்டுகோள் வைத்த நடிகை அடா ஷர்மா!!

தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சர்ச்சைக்கு உள்ளான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை எதிர்ப்பவர்களுக்கு அந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை அடா ஷர்மா அவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளார்.

ஹிந்தி சினிமா துறையில் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை அடா ஷர்மா அவர்கள் நடித்த ஹிந்தி படமான செல்பி திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

அதையடுத்து இவர் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இந்தியாவில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.

பல்வேறு கட்சிகளும் தலைவர்களும் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க கோரியும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை எதிர்ப்பவர்களுக்கு நடிகை அடா சர்மா வேண்டுகோள் வைத்துள்ளார். இப்படம் குறித்து நடிகை அடா ஷர்மா அவர்கள் “இந்த திரைப்படத்தை பலரும் போலி என்று கூறுகின்றனர்.

ஆனால் இயக்குநர் அவர்களின் ஏற்பாட்டில் நான் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களையும் நேரில் சென்று அவர்களுக்கு நிகழ்ந்ததை கேட்டு அறிந்தேன்.

மிகவும் வருந்தினேன். தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை போலி என்று சொல்பவர்கள் அனைவரும் ISIS மற்றும் Brides என்ற வார்த்தைகளை கூகுளில் தேடிப் பாருங்கள். அதன் பிறகாவது தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் உண்மைத் தன்மை உங்களுக்கு புரியும்” என்று அவர் டுவீட் செய்துள்ளார்.

Previous articleவிரைவில் ஒ பன்னீர் செல்வம் இணைந்து கொள்வார்!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!!
Next articleபிரதமர் அவர்களின் பேச்சை கேட்கவில்லை!! அபராதம் விதித்த தனியார் பள்ளி!!