கூட்டணிக்குள் வெடித்தது சர்ச்சை…! பாயும் அதிமுக பதுங்கும் பாஜக…!

Photo of author

By Sakthi

எம்ஜிஆர் புகைப்படத்தை பயன்படுத்துவதற்கு அதிமுகவை தவிர எந்த கட்சிக்கும் உரிமை இல்லை என அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் வைகைச்செல்வன் தெரிவித்திருக்கின்றார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக கூட்டணியில் சேர்ந்து இருக்கும் பாரதிய ஜனதா கட்சி சில சமயம் சில சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றது அதேநேரம் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறது என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகன் தெரிவித்து வருகிறார். இதன் காரணமாக பாஜக மற்றும் அதிமுக கூட்டணி எதிர்வரும் சட்டசபை தேர்தல்களிலும் இணைந்து தேர்தலை சந்திக்கும் என்பதை தெளிவாக இருக்கின்றது.

இவ்வகையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகன் அவர்களின் தலைமையில் அடுத்த மாதம் ஆறாம் தேதி வெற்றிவேல் யாத்திரை தொடங்க இருக்கிறது.

என்று ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது இதற்காக ஒரு காணொளியும் வெளியிடப்பட்டு வருகின்றது. அந்த காணொளியில் பொன் மனச்செம்மலின் அம்சமாக மோடியை கண்டோம் என்ற வரி இடம்பெற்றிருக்கிறது.

அத்துடன் பாரதிய ஜனதாவில் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் அவர்களின் புகைப்படமும் இருந்திருக்கிறது இந்த விவகாரம் அதிமுகவினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இது சம்பந்தமாக பதில் கூறிய எல். முருகன் எம்ஜிஆர் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்து இருக்கின்றார். அவரைப்போல பிரதமர் நரேந்திர மோடியும் நன்மைகளை செய்து வருகின்றார். பெண்களிடம் எம் ஜி ஆர் அவர்களுக்கு நல்ல ஆதரவு இருக்கின்றது அதேபோல மோடி அவர்களும் பெண்கள் மத்தியில் ஆதரவு பெற்ற ஒரு தலைவராக இருந்து வருகிறார் . என்று பதிலளித்து இருக்கின்றார்.

தமிழக பாஜகவின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் வைகைச்செல்வன் எம் ஜி ஆரின் கொள்கைக்கு மாற்றாக இருந்து வரும் காட்சிகள் அவருடைய புகைப்படத்தை பயன்படுத்த உரிமை இல்லாதவர்கள். எனவும் விளக்கம் அளித்திருக்கிறார். தேர்தல் நெருங்கி வரும் காலத்தில் கவிஞர் எம்ஜிஆர் புகைப்படத்தை உபயோகப்படுத்துவது அதிமுக கூட்டணியில் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கின்றது.