மீண்டும்  திருவள்ளுவருக்கு காவி உடை!! ஆளுநர் மாளிகை அழைப்பிதழில்  சர்ச்சை!!

Photo of author

By Sakthi

Governor Invitation Card:சர்வதேச கருத்தரங்க ஆளுநர் மாளிகை அழைப்பிதழில்  திருவள்ளுவர் காவி உடை அணிந்து இருக்கும் படத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

திருவள்ளுவர், கவிஞர்கள் கபீர் தாஸ், யோகி வேமனா ஆகியோரை குறித்த சர்வதேச கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற இருக்கிறது.  இந்த கருத்து அரங்கிற்காக   ஆளுநர் மாளிகைக்கு வருகை புரிய அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் தான் தற்போது சர்ச்சை எழுந்து இருக்கிறது.

அதாவது  கடந்த ஆண்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியீட்டு இருந்த திருவள்ளுவர் திருநாள் அழைப்பிதழில் வள்ளுவர் காவி உடை, பூணூல் அணிந்து இருப்பது போன்ற படம் இடம் பெற்று இருந்தது. மேலும் ஆளுநர் ரவி, “ஆன்மீக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவர், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையைச் செலுத்துகிறேன்” என  வாசகங்கள்குறிப்பிட்டு இருந்தது.

அந்த வாசகங்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். கடுமையான எதிர்ப்புகள் வந்தால் திருவள்ளுவர் அணிந்த காவி உடை படத்தை  நீக்கியது. அந்த வகையில் மீண்டும் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான அழைப்பிதழில் திருவள்ளுவர்  காவி  உடை அணிந்திருக்கும் படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து மதுரை எம்.பி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில் திருவள்ளுவருக்கு காவி பூசி இந்து மத அரசியலை திணிப்பதாக கூறினார். திருவள்ளுவர் மீது மத அடையாளத்தை தொடர்ந்து முன் நிறுத்தி வருகிறார். இந்துத்துவா அரசியலை பிரச்சாரம் படுத்துவதே  ஆளுநர் மாளிகை முக்கிய குறிக்கோளாக இருக்கிறது என கண்டனம் தெரிவித்துள்ளார்.