கட்சியில் மூத்த தலைவர்களுக்கு இதுதான் இடம்.. மோடியின் தடாலடி!! கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!!  

0
351
Modi and LK Advani
#image_title

கட்சியில் மூத்த தலைவர்களுக்கு இதுதான் இடம்.. மோடியின் தடாலடி!! கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!!

Modi and LK Advani: இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நாட்டின் மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்க உள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்த அளவிற்கு பாஜக அதிக இடங்களை கைப்பற்றவில்லை என்றாலும் கூட்டணி கட்சிகளின் உதவியோடு இந்த முறை மத்தியில் பாஜக அரசு ஆட்சி அமைக்க உள்ளது.

இந்நிலையில் தான் பாஜகவின் தலைவரான மோடி குறித்த சர்ச்சைகளும் அவ்வபோது சமூக வலைத்தளங்களில் எழுந்து வருகிறது. நாட்டின் பிரதமராக பதவி ஏற்க உள்ள மோடி பாஜகவின் முன்னோடிகளான லால் கிருஷ்ணா அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோரிடம் நேரில் சென்று ஆசி பெற்றார். எல். கே அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் பாஜகவின் மூத்த தலைவர்கள் ஆவார்கள்.

இந்நிலையில் நரேந்திர மோடி பாஜகவின் மூத்த தலைவர்களான எல்.கே அத்வானி, மற்றும் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோரை கட்சியிலிருந்து ஓரம் கட்டுவதாக பல சர்ச்சைகள் அவ்வபோது எழுந்து வந்தன. இதில் முதல் ஆளாக இருப்பவர்தான் எல்.கே அத்வானி . நரேந்திர மோடி தேர்தல் நேரம், அத்வானியில் பிறந்த நாள் போன்ற தினங்களில் மட்டும் தான் அவரை சந்தித்து ஆசி பெறுகிறார். மற்ற கட்சி சம்பந்தப்பட்ட எந்த ஒரு முக்கிய நிகழ்வுகளிலும் அத்வானியை அவர் நடத்தும் விதம் குறித்து பல நேரங்களில் சர்ச்சைகள் கிளம்பின.

பாஜகவின் அஸ்திவாரம் அத்வானி

1984 ஆம் ஆண்டு பாஜக கட்சி வெறும் இரண்டு மக்களவை உறுப்பினர்கள் மட்டுமே கொண்டிருந்த நிலையில் 1998 இல் பாஜகவை ஆளுங்கட்சி என்ற நிலைக்கு உயர்த்தியவர் அத்வானி. அத்வானி நினைத்திருந்தால் அப்போது அவருக்கு இருக்கும் செல்வாக்குக்கு பிரதமராக பதவி ஏற்றி இருக்கலாம். ஆனால் துணை பிரதமராக, உள்துறை அமைச்சராக, தகவல் ஒலிபரப்புத் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் அமைச்சராக பதவி வகித்தவர் அத்வானி. மேலும் இவர் குஜராத்தின் காந்திநகர் மக்களவைத் தொகுதிகளில் ஆறு முறை களம் கண்டு வெற்றி பெற்றுள்ளார்.

அயோத்தி ராமர் கோயில்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அடித்தளம் அமைத்தவர் அத்வானி என்று கூறலாம். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி கடந்த 1990 இல் குஜராத்தில் இருந்து அயோத்தி வரை ரத யாத்திரை நடத்தினார். மேலும் இவர் ஜனதேஷ் யாத்திரை, ஸ்வர்ண ஜெயந்தி ரத யாத்திரை, பாரத உதய் ரத யாத்திரை, பாரத சுரக்‌ஷா யாத்திரை போன்ற யாத்திரைகளை நடத்தி பாஜகவை தென் மாநிலங்கள் வரை கொண்டு சேர்த்தவர். ஆனால் சமீபத்தில் அயோத்தியில் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமர் கோயிலின் விழாவிற்கு அத்வானி செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதற்கு காரணம் அங்கு நிலவும் கடும் குளிரால் தான் செல்லவில்லை என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

மோடியும் அத்வானியும்

தற்போது நாட்டில் மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ள மோடி ஆரம்ப கட்டத்தில் குஜராத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தால் மோடியின் முதல்வர் பதவி பறிபோக இருந்தது. அதனை தடுத்து மோடியின் முதல்வர் பதவியை காத்தவர் அத்வானி தான். கடந்த 2014 இல் மக்களவைத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்தது. அப்பொழுது தான் பிரதமராக மோடி பதவி ஏற்றார். பாஜக கட்சியில் செல்வாக்கு மிகுந்தவராக அத்வானி இருந்தாலும், அப்பொழுது மோடி பிரதமராக பதவி ஏற்க எம்பி யாக பங்களித்தவர் அத்வானி. முதன்முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்கும் போது, அத்வானின் காலில் விழுந்து வணங்கியது குறிப்பிடத்தக்கது.

மோடியும் சர்ச்சையும்

மோடி பிரதமர் ஆன பிறகு அமைச்சரவையில் அத்வானிக்கு எம்பிகள் மீதான நன்னடத்தை புகார்களை விசாரிக்கும் மக்களவை நெறிமுறை குழுத்தலைவர் என்ற பதவியே கிடைத்தது. ஆனால் அந்த பதவி மற்ற பதவிகளை விட முக்கியத்துவம் இல்லாத பதவியாக தான் பார்க்கப்பட்டது. இந்நிலையில் அத்வானியை மோடி தவிர்ப்பதாகவே அனைவராலும் பேசப்பட்டு வந்தது. இவ்வாறு சர்ச்சைகள் போய்க்கொண்டு இருக்கும் வேளையில் பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு 2015 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருது கொடுத்து அத்வானியை கவுரவித்தது.

மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு திரிபுராவில் பாஜக ஆட்சியைப் பிடித்த பொழுது முதலமைச்சராக பிப்லப் தேவ் பதவி ஏற்கும் விழாவில் பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி போன்ற தலைவர்கள் மேடையில் இருந்த பொழுது, பிரதமர் மோடியை தலைவணங்கி நின்ற அத்வானியை மோடி கண்டு கொள்ளாமல் சென்றதும், அதனை உணர்ந்த அத்வானி தர்ம சங்கடத்துடன் நின்றதும் குறிப்பிடத்தக்கது. அந்த காட்சிகள் அப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் மிகவும் பேசுபொருளானது.

பாஜகவின் தூணாக விளங்கிய அத்வானியை மோடி ஓரம் கட்டுவதாக பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட அத்வானிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவர் ஆறு முறை வெற்றி கண்ட குஜராத்தின் காந்திநகர் மக்களவை தொகுதி அமித்ஷாவுக்கு ஒதுக்கப்பட்டது. மேலும் பாஜகவின் விதிமுறைகளில் ஒன்றான 75 வயதை கடந்தவர்களுக்கு கட்சியிலும், ஆட்சியிலும் பதவி இல்லை என்பது நடைமுறை இருந்ததால் மூத்த தலைவரான அத்வானியும் ஓரம் கட்டப்பட்டார் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் மோடியின் தலைமையிலான அரசு 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.