குக் வித் கோமாளி செட்டில் என்ன தான் நடக்கிறது? எனக்கு ஏற்பட்ட நிலைமைதான் மற்ற கோமாளிகளுக்கும்..!

0
226
Cook With Comali
#image_title

Cook With Comali: பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. இந்த விஜய் டியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

கடந்த நான்கு சீசன்களாக இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடி, தற்போது சீசன் 5 ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. கடந்த 4 சீசன்களிலும் நடுவர்களாக செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளுக்கு எப்படி ரசிகர்கள் உள்ளனரோ, அதேபோன்று நடுவர்களுக்கும், அவர்கள் செய்யும் நகைச்சுவைக்கும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில் தான் குக் வித் கோமாளி சீசன் 5-யில் இருந்து விலகுவதாக செஃப் வெங்கடேஷ் பட் தெரிவித்திருந்தார். அவரின் ரசிகர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் உங்களை மிஸ் செய்வதாக கூறி கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5-யில் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் பங்கேற்றுள்ளனர்.

இந்த சீசனில் நடுவர்களை தொடர்ந்து புதிய கோமாளிகளும் இணைந்துள்ளனர். புதிய கோமாளிகளாக ராமர், KPY வினோத், அன்ஷிதா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். போட்டியாளர்களாக அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, ஷெர்லின் சோயா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பூஜா, ஃபுட் ரிவியூவர் இர்பான், சீரியல் நடிகர் வசந்த் வசி, தொகுப்பாளினி பிரியங்கா, விடிவி கணேஷ், பாண்டியன் பூஜா, சுஜிதா ஆகியோர் போட்டியாளராக பங்கேற்றுள்ளனர்.

இந்நிகழ்ச்சி கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இந்நிலையில் தான் இந்நிகழ்ச்சியை விட்டு (Nanjil Vijay Quits Cook With Comali) நாஞ்சில் விஜயன் வெளியேறி இருக்கிறார். தற்போது சமூக வலைதளங்களில் இது (cook with comali season 5 issue)  பேசுபொருளாகி உள்ளது. இது குறித்து நாஞ்சில் விஜயன் பதிவிட்டுள்ளதாவது, இனி பாக்ஸ் ஆபீஸ் தயாரிக்கும் எந்த நிகழ்ச்சிகளிலும் தான் பங்கேற்க போவதில்லை என்று பதிவிட்டுள்ளார். எனக்கும் விஜய் டிவிக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே நிகழ்ச்சியில் இருந்து செஃப் வெங்கடேஷ் பட் வெளியேறிய நிலையில் தற்போது நாஞ்சில் விஜயன் வெளியேறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தயாரிப்பு நிறுவனத்திற்கும் நாஞ்சில் விஜயனுக்கும் ஏதோ கம்யூனிகேஷன் பிரச்சனை இருக்கலாம் என்றும், விஜய் டிவியின் தொகுப்பாளினி பிரியங்கா மற்றும் சீரியல் நடிகை அன்ஷிதாவுக்கும் தனி முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் மற்ற கோமாளிகளுக்கு தயாரிப்பு நிறுவனம் சரியான பதில் தர மறுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.