இந்தியன் 2 படம் வெளியிடுவதில் சர்ச்சை!! கமல் மீது அதிரடி வழக்கு!!

Photo of author

By Janani

இந்தியன் 2 படம் வெளியிடுவதில் சர்ச்சை!! கமல் மீது அதிரடி வழக்கு!!

நடிகர் கமல்ஹாசன் நடித்து வெளிவரவிருக்கும் இந்தியன் 2 படம் தொடர்பாக தற்பொழுது புது சர்ச்சை எழுந்துள்ளது.இதில் கமல்ஹாசன் மற்றும் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

கடந்த 1996ம் வருடம் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளி வந்த இந்தியன் 1 படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியடைந்தது.இதில் கதாநாயகனாக கமல் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்,மேலும் வயதான தோற்றத்தில் அப்பாவாக வரும் கமல், இந்திய அரசு அலுவலங்களில் லஞ்சம் வாங்குவது இயல்பானது என்று இருக்கும் கருத்தை, எதிர்ப்பது போலவும் மேலும் லஞ்சம் பெறும் அரசு ஊழியர்களை கொலை செய்யும் ஒரு இந்தியன் தாத்தாவாக மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.இதில் வர்ம கலைகள் தொடர்பான காட்சிகள் இடம் பெறும்.

தற்பொழுது அந்த வர்ம கலையை சொல்லி கொடுத்த ராஜேந்திரன் என்பவர் இந்தியன் 2 படத்திற்கு எதிராக மதுரை மாவட்ட 4-வது உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் நான் வர்ம கலையை கமல் அவர்களுக்கு பயிற்றுவித்தேன்.ஆனால் தனது பெயரை இந்தியன் 2 படத்தில் சேர்க்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியன் 2’ திரைப்படம் வரும் (ஜூலை 12) திரையரங்குகளில் வெளியாகவிருந்த நிலையில் இவர் போட்ட மனுவால் படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும் படி நீதிபதி செல்வமகேஸ்வரி அவர்கள் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கின் மீதான விசாரனை நாளை வியாழக்கிழமை (11.07.2024) அன்று நடைபெற உள்ளது.