வைரமுத்துவின் முதல் பாடல் குறித்த சர்ச்சை! இறுதிவரை ஒதுக்கி வைத்திருந்த தயாரிப்பாளர்

Photo of author

By Janani

வைரமுத்துவின் முதல் பாடல் குறித்த சர்ச்சை! இறுதிவரை ஒதுக்கி வைத்திருந்த தயாரிப்பாளர்

தமிழ் திரையுலகில் 80 மற்றும் 90 காலகட்டங்களில் வைரமுத்து வரிகள் எழுதி கொடுத்தால் எந்த பாடலும் ஹிட் அடித்து விடலாம் என்ற நிலை இருந்தது.இவரின் தமிழ் வார்த்தைகள் படத்தில் இடம்பெறும் போது, அந்த காட்சிகளின் உயிரோட்டத்தை நிஜத்தில் கொண்டு வருவது போல் தோன்றும். அந்த அளவுக்கு மொழிகளுக்கு அழுத்தம் கொடுத்து இருப்பார்.மேலும் கிராமிய பாடல்கள் அனைத்திலும் அந்த ஊரின் மண் வாசம் வெளிப்படும்.

இவர் எழுதிய முதல் பாடல் ‘நிழல்கள்’ படத்தில் இடம்பெற்ற “இது ஒரு பொன்மாலைப் பொழுது” என பெரும்பாலான நிகழ்ச்சிகளில் அவரே கூறியுள்ளார். மேலும் இந்த பாடல் இளையராஜாவின் இசையில் வெளிவந்தது என்பது கூடுதல் சிறப்பு.இந்த பாடல் குறித்து தான் தற்பொழுது ஒரு சர்ச்சை வெளியாகியுள்ளது.

தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அளித்த பேட்டி ஒன்றில் இது தொடர்பான தகவலை பகிர்ந்துள்ளார்.அதாவது தன் தந்தை பாஸ்கர் இயக்கிய சூலம் படத்தில் தான் வைரமுத்து முதன் முதலில் பாடலை எழுதினார்.ஆனால் அவர் அதனை மறைத்து நிழல்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினேன் என்று ஊடகங்களில் சொல்லி வருகிறார்.

இதனால் தான் எனது அப்பா இயக்கிய எந்த படத்திலும் அவரது பாடல்கள் இடம் பெறாமல் போனது. அதுமட்டுமில்லாமல் இந்த செய்தியை அவருடைய தந்தையே கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.