சமையல் எரிவாயுவின் விலை குறைந்தது! மகிழ்ச்சியில் மூழ்கிய பயனாளர்கள்!
சமையல் எரிவாயுவின் விலை குறைந்ததாக எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளதால் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தும் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அது போல சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்கின்றன. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படும்.
இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் வணிக பயன்பாட்டுக்கு உபயோகபடுத்தும் சிலிண்டரின் விலை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதன்படி வணிக பயன்பாட்டுக்கு உபயோகிக்கும் சிலிண்டரின் விலை 84.50 ரூபாய் குறைந்து 1937 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை 1118.50 ரூபாயக உள்ளது. குறையவும் இல்லை அதிகரிக்கவும் இல்லை.
கடந்த மே மாதமும் வணிக பயன்பாட்டுக்கு உபயோகிக்கப்படும் சிலிண்டரின் விலை 171 ரூபாயாக குறைந்தது. இந்த மாதம் 84 ரூபாயாக குறைந்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை குறைந்துள்ளதால் ஹோட்டல் உள்ளிட்ட தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலார்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.