Pongal gift set: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொகுப்பினை வழங்க கூட்டுறவு துறை முடிவு.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்காக அங்கன்வாடியில் தமிழக அரசு சார்பில் பரிசு தொகுப்புகளை வழங்குவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதம் தான் இருக்கும் நிலையில் சிறப்பு பரிசு தொகுப்பு பற்றிய எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் அதிகரித்து வந்தது. அதை பூர்த்தி செய்யும் கூட்டுறவுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
அதில் கூட்டுறவுத் துறை சார்பில் கூட்டுறவு அங்காடிகள் மூலம் குறைந்த விலையில் பொங்கல் தொகுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இதற்கு முன்பாக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அக்டோபர் மாதம் ரேஷன் கடைகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை தொடங்கி வைத்தார்.
அதில், premium மற்றும் elite என்ற இரண்டு வகையான முறைகளில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்த பொங்கல் சிறப்பு தொகுப்பானது கூட்டுறவு பொங்கல் என்ற பெயரில் ரூ 199, ரூ 499, ரூ 999 மதிப்பில் வழங்கப்பட்டு வருகிறது.குறைந்த விலையில் பொருட்கள் ரேஷன் கடையில் விற்பனை செய்யப்படும்.
மேலும், பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கரும்பு, வெல்லம் பொங்கல் வைக்க வேண்டிய பொருட்கள் மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் மற்றும் இலவச வேட்டி, சேலை போன்ற பொருட்கள் வழங்க அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.