கொரோனா பாதுகாப்பு குறித்து தனி ஒருவராக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த காவல் ஆய்வாளர்

Photo of author

By Ammasi Manickam

தென்காசி:

தென்காசி மாவட்டம் வடகரை கீழ்பிடாகை பேரூராட்சி பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு கொரனோ நோய்தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் அனாவசியமாக வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்வதாக இருந்தால் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் எனவும் முக்கிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரனோ நோய்த் தொற்றின் பாதிப்பு குறித்தும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்தும் வடகரை கீழ்பிடாகை பேரூராட்சி பகுதியில் அச்சன்புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.கனகராஜன் அவர்கள் பொது மக்களுக்கு நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு மற்றும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து வடகரை கீழ்பிடாகை பேரூராட்சி பகுதி முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்.