மீண்டும் வந்த கொரோனா! ட்ரம்ப் கவலைக்கிடம்!

Photo of author

By Sakthi

கொரோனா தோற்றால் உலகிலேயே மிக அதிகமாக பாதிப்படைந்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அவர் அமெரிக்க அதிபர் பதவியில் இருந்த சமயத்தில் முககவசத்தை அணியாமலே தன் வேலைகளை கவனித்து வந்தார். அதன் காரணமாக, அவருக்கு கொரோனா உண்டானது.

சென்ற வருடம் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி அவருக்கு தொற்று உண்டானது. இதனை அடுத்து அவருடைய மனைவி மெலானியா அவர்களுக்கும் தொற்று உருவானது ஆனாலும் சிகிச்சைக்கு நடுவே வெளியே வந்து பரபரப்பை உண்டாக்கினார்.

இதனை அடுத்து ஒரு குறிப்பிட்ட தினங்களுக்கு முன்னதாகவே மருத்துவமனையில் இருந்து வெளியேறி விட்டதாக சர்ச்சை உண்டானது. இந்த நிலையில், தற்சமயம் அவருக்கு மறுபடியும் தொற்று ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது .அவருக்கு தற்சமயம் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன..