பரிதாபமான நிலையில் பிக் பாஸ் பிரபலம்!

Photo of author

By Sakthi

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் போட்டியாளராக 6 வயதில் கலந்து கொண்டவர் அஜித். அந்த நிகழ்ச்சியில் குறைந்த மதிப்பெண் வாங்கியதன் காரணமாக, விரைவாகவே அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.இதனைத் தொடர்ந்து பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று கொண்டு இருந்த அவருக்கு திடீரென்று பிக் பாஸ் நான்காவது பகுதியில் வாய்ப்பு தேடி வந்தது. போட்டியாளராக பிக்பாஸ் வீட்டில் இருந்த அவர் பாடுவதை தவிர வேறு எந்த ஒரு விஷயத்திற்கும் வாய் திறக்காமல் இருந்து வந்தார்.

இதன் காரணமாக, நிகழ்ச்சியின் இறுதி வரையில் அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தார். அதனை தொடர்ந்து அந்த வீட்டை விட்டு வெளியேறிய அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் மற்றொரு பிக்பாஸ் போட்டியாளரான கேப்ரில்லா உடன் ஒன்றிணைந்து நடனமாடினார்.

இப்படியான சூழலில், கேப்ரில்லா அவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை அடுத்து அவருடன் நடனமாடி வந்த அஜித்திற்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் அஜித்குமார் எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. என்னுடைய உடல்நிலை சீராக இருக்கிறது. உங்களுடைய பிரார்த்தனைக்கு நன்றி எல்லோரும் பாதுகாப்பாக உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றிய வீட்டை விட்டு வெளியே சென்று வாருங்கள். பாதுகாப்பாக இருங்கள் விரைவில் இயல்பு நிலை திரும்பும் என நம்புவோம் என்று கூறியிருக்கிறார்.