மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா உறுதி?

0
114

தமிழ்நாட்டில் சில தினங்களாக கட்சி பிரமுகர்களுக்கும்,அரசு ஊழியர்களுக்கும் தொடர்ந்து தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. இதில் சில கட்சி பிரமுகர்கள் இந்தத் தொற்றால் உயிரிழந்துவிட்டனர்.இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஒருவருக்கு தொற்று உறுதிச் செய்யப்பட்டு அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகமே மூடப்பட்டுள்ளது.


காரைக்கால் மாவட்ட ஆட்சியரின் சமையலருக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் குடும்பம் உட்பட அலுவலகத்தில் பணிபுரிந்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.தற்போது
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மாவிற்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் காரைக்கால் ஆட்சியர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

காரைக்காலில் இதுவரை 231 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இதில் தற்போது 148 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று காரைக்கால் நோய் தடுப்பு துறை இயக்குனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Previous article“என்னால மூச்சு விட முடியல” என கதறிய பெண் கழுத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொலை!
Next articleஐ.பி.எல். போட்டிக்கு சிக்கலாகி விடும்