கேப்டனுக்கு கொரோனா உறுதி:? நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதி!

Photo of author

By Pavithra

கேப்டனுக்கு கொரோனா உறுதி:? நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதி!

Pavithra

கேப்டனுக்கு கொரோனா உறுதி:? நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதி!

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நல பாதிப்பு காரணமாக நேற்று நள்ளிரவில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே பல்வேறு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்திற்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
விஜயகாந்திற்கு கொரோனா பாதிப்பு என்று வெளிவந்த செய்தியால் தேமுதிக கட்சி தொண்டர்களிடையேவும் கேப்டனின் ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருந்தபோதிலும் விஜயகாந்திற்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதும் இதில் குறிப்பிடத்தக்கது.