மீண்டும் அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல்! தீவிர கட்டுப்பாடுகளை விதித்த மாவட்ட ஆட்சித்தலைவர்!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நோய்தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது, அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கோயம்புத்தூர், உள்ளிட்ட மாவட்டங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 692 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆகவே தமிழகத்தில் நோய் தொற்று பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,60,874 என அதிகரித்திருக்கிறது.

அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 306 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 122 பேருக்கும், கோயம்புத்தூரில் 22 பேருக்கும், இந்த பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே கூட்டம் அதிகமாக இருக்கின்ற பகுதிகளில் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் எனவும், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

இப்படியான சூழ்நிலையில், தொடர்ந்து நோய்த்தொற்று பரவால்ல அதிகரித்து வருகிற காரணத்தால், வேலூர் மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் சில விஷயங்களை கூறியிருக்கிறார்.

அதாவது, மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியை பின்பற்றவேண்டும், பெரிய வணிக வளாகங்களில் குளிர்சாதன உபகரணம் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்றும், கூறப்பட்டுள்ளது.

அதேபோல திருமண மண்டபங்களில் பொது மக்களின் எண்ணிக்கை 100 நபர்கள் வரை மட்டுமே இருப்பதை உறுதி செய்ய வேண்டும். துக்க நிகழ்வுகளில் 50 பேருக்கு மேல் அனுமதிக்கப்பட கூடாது, போன்ற கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்திருக்கின்றன. இந்த நடைமுறை மற்ற மாவட்டங்களிலும் மிக விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.