இந்தியாவில் நோய்தொற்று இரண்டாவது அலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13091 பேருக்கு புதிதாக நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. நோய்தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 13 ஆயிரத்து 887 பேர் குணமடைந்து இருக்கின்ற சூழ்நிலையில், 340 பேர் இந்த நோய் தொற்றுக்கு பலியாகி இருக்கிறார்கள். இந்தியாவில் இதுவரையில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,44,01,670தாக அதிகரித்திருக்கிறது.
நோய்தொற்று பாதிப்பிலிருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 37 லட்சத்து 925 ஆக அதிகரித்திருக்கிறது. நோய்த்தொற்று பாதிப்புக்கு இதுவரையில் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 62 ஆயிரத்து 189 ஆக அதிகரித்திருக்கிறது. இந்தியா முழுவதும் தற்சமயம் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 556 பேர் நோய்த்தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள், இது கடந்த 265 நாட்களில் இல்லாத அளவிற்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை குறைவு என்று சொல்லப்படுகிறது, நாட்டின் ஒரே நாளில் மட்டும் 57,54,817 நோய் தொற்று தடுப்பு ஊசி போடப்பட்டு இருக்கிறது. நாட்டில் இதுவரையில் 110 கோடியே23 லட்சத்து 34 ஆயிரத்து 225 கோடி தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன.