மகிழ்ச்சி! தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது நோய் தொற்று பாதிப்பு!

0
115

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் வேகமாக உலகநாடுகளுக்கு பரவத்தொடங்கியது. இதனைத்தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவி இந்த நோய்த்தொற்று உலகளாவிய மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக, உலகளாவிய பொருளாதாரம் மந்த நிலையை அடைந்தது. அத்துடன் உலக நாடுகள் அனைத்தும் சீனாவின் மீது கடும் கோபத்தில் இருந்து வருகின்றன.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவிற்குள் ஊடுருவிய இந்த நோய் தொற்று பல உயிர்களை பலி வாங்கியது. அதோடு பல பிரபலங்களும் இந்த நோய் தொற்றுக்கு இரையானார்கள்.

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் இந்த நோய் தொற்றுக்கு எதிரான மாற்று மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. ஆகவே நோய்த்தொற்று படிப்படியாக குறைய தொடங்கியது.

தமிழகத்தை பொறுத்தவரையில் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் நாள்தோறும் நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்த சூழ்நிலையில், நேற்று இந்த பாதிப்பு 100க்கு கீழே குறைந்தது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதாவது, தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 55,656 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 209 ஆண்கள், 157பெண்கள், என்று ஒட்டுமொத்தமாக 366 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 96 பேரும், கோயம்புத்தூரில் 54 பேரும், செங்கல்பட்டில் 40 பேரும், நீலகிரியில் 18 பேரும், பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறைந்தபட்சமாக பெரம்பலூர், மயிலாடுதுறை, தென்காசி, திருவாரூர், திருநெல்வேலி, விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்புகள் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இதில் 12 வயதிற்கு உட்பட்ட 37 குழந்தைகளுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் 54 பேருக்கும், நோய்தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இதுவரையில் 6,32,24,787 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 34,49,373 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரத்தின் அடிப்படையில் 1,088 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 515 பேர் ஆக்சிஜன் வசதி கொண்ட பிரிவிலும், 196 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும், சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் நோய் தொற்றால் நேற்று கோயம்புத்தூரில் மட்டும் 86 வயது முதியவர் ஒருவர் பலியானார் 37 மாவட்டங்களில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

தமிழ்நாட்டில் இதுவரையில் ஒட்டுமொத்தமாக 38004 பேர் நோய் தோற்றால் பலியாகியிருக்கிறார்கள். இந்த நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து 1,013 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள். 5,745 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Previous articleரஷ்யா உக்ரைன் விவகாரம்! போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் விசாரணை!
Next articleஉக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள்1000 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்! இந்திய தூதரகம் வெளியிட்ட தகவல்!