பிரபல நடிகைக்கு கொரோனா! ரசிகர்கள் அதிர்ச்சி!

0
244

இந்தியாவில் நோய்த்தொற்று இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் தொற்று சாதாரண மனிதன் வரை சாதனையாளரான மனிதர் வரை எல்லோரையும் எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் தாக்கி வருகிறது பல திரையுலக பிரபலங்களும் அரசியல் பிரபலங்களும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் நடிகை சுனைனாவும் இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இவர் தமிழ் திரையுலகில் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வம்சம், போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார், அவர் இந்த நோய்த் தொற்று பாதிப்பு குறித்து தன்னுடைய வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருப்பது என்னவென்றால்,

மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தும் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். என் குடும்பத்தினரை தவிர்த்து நான் வேறு யாருடனும் தொடர்பில் இல்லை ஆகையால் அவர்களும் தனிமையில் இருக்கிறார்கள்.. எல்லோரும் முகக்கவசம் அணியுங்கள் பாதுகாப்பாக இருங்கள் வீட்டிலேயே இருங்கள் எல்லோருக்காகவும் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.

Previous articleதொடங்கியது 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர்!
Next articleதமிழக சட்டசபையின் சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வானார்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here