ரஷ்யாவின் தொற்று நோயியல் நிபுணர் விலாடிஸ் லாவ் அளித்திருக்கின்ற பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, மனிதர்கள் மீது நோய்த்தொற்றின் தாக்கம் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் இயற்கையில் புதிய புகலிடத்தை தேடுகின்றது. தன்னை கொன்று விடாத புதிய விலங்கை இந்த வைரஸ் கண்டுபிடித்துவிட்டால் அதன் உடம்புக்கு சென்று தங்கிவிடும் அங்கிருந்து புதிய தோற்று இலக்கை எதிர்நோக்கியிருக்கும், மனித சமுதாயத்தில் தடுப்பூசி போட்டவர்கள், மீண்டவர்கள், எண்ணிக்கை 70 முதல் 80 சதவீதத்தை எட்டும் போது நோய் தொற்று வைரஸ் இயற்கையில் ஏதாவது ஒரு விலங்கை புதிய புகலிடமாக அடையும். ஆகவே எல்லோருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவது குறித்து உலக சுகாதார நிறுவனம் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், தமிழகத்தில் இந்த தடுப்பூசி போடும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது, தமிழகம் முழுவதும் பல கோடி நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள் அதேநேரம் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. பொதுமக்களிடையே இருக்கும் இந்த அச்சத்தைப் போக்கும் விதத்தில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.
அதேநேரம் தலைநகர் சென்னையில் 80க்கும் மேற்பட்ட சதவீத அளவிலான நபர்கள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அதே போல தமிழகம் முழுவதும் அனைவரும் முழுமையாக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதே தமிழக அரசின் வேண்டுகோளாக இருந்து வருகிறது.