சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற வசதிகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது மருத்துவமனை தலைமை இயக்குனர் தேரணி ராஜன் உடனிருந்தார் என்று சொல்லப்படுகிறது. இந்த ஆய்வையடுத்து டாக்டர் ராதாகிருஷ்ணன் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளித்தார்.
நோய் தொற்று 2வது அலையில் அதிக ஆக்சிஜன் தேவையிருந்தது. அந்நிலை தற்போது இல்லை. ஆனாலும் தேவையான அளவு ஆக்சிஜன் உள்ளது. 2500 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் 121 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அதில் நோய்த்தொற்று தடுப்பூசி செலுத்தாதவர்கள் 65 பேர், 40 பேர் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் .நோய்த்தொற்றை பொறுத்தவரையில் ஜனவரி மாதம் 15ஆம் தேதி வரையில் நோய் தொற்று சதவீதம் அதிகமாக இருந்தது, தற்போது நோய் தொற்று குறைந்துவருகிறது என கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டின் 26 மாவட்டங்களில் நோய்த் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்திருக்கிறது. கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் நோய்தொற்று மிகவும் அதிகமாகவும், கோவை. ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் சற்று அதிகமாகவும், இருக்கிறது.
தமிழ்நாட்டில் நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 5 சதவீதத்தினர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 95 சதவீதத்தினர் வீட்டு தனிமையில் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 95 சதவீதம் என்று சொல்லப்படுகிறது. வீட்டு தனிமையில் இருப்பவர்கள் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 1018 பேர் மட்டுமே அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்கள். அதில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் என்று தெரிவித்திருக்கிறார் ராதாகிருஷ்ணன்.
அதோடு சமூக வலைதளங்களில் தேர்தல் வருவதால் நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக கருத்து பரவி வருகிறது. தேர்தலுக்கும், நோய் தொற்றுக்கும், எந்தவிதமான சம்பந்தமுமில்லை என்று தெரிவித்து இருக்கிறார்.
தொடர்ச்சியாக 2 வருடங்கள் இணையதளம் மூலமாக கல்வி கற்று வரும் மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் பல நாடுகளை அறிவுறுத்திய சூழ்நிலையில்தான் நிபுணர்களின் கருத்துக்களின் அடிப்படையில், பள்ளிகள் திறக்கப் படுகின்றது.
மாணவர்களுடைய பாதுகாப்பை மாவட்ட கல்வி அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியிருக்கிறார்.