கொரோனா குணமானது! ஆனால் தவறான மருந்தினால் உயிர் பிரிந்த அவலம்!
கொரோனா இரண்டாம் அலையின் கால கட்டத்தில் மக்கள் பலரும் பொருளாதார நிலையில் பின்தங்கி உள்ளனர்.ஆனால் மக்களுக்காக மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும், அதை தயாரிக்கும் மருத்துவர்களும் வசதி படைத்தவர்களாக மாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர பிரதேச மாநிலத்தில், நெல்லூர் அருகே உள்ள கிருஷ்ணப்பட்டினத்தில் ஆனந்தையா என்பவர் சித்த வைத்தியம் மூலம் கொரோனாவை குணப்படுத்துவதாக கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலான நிலையில், அதை ஆந்திர அரசும் தற்போது பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.
அவர் இரண்டு வகையான மருந்துகளை அதாவது வாய் வழியே சாப்பிடக் கூடிய உருண்டை போன்ற மருந்தும், கண்களுக்கு ஊற்றக்கூடிய சொட்டு மருந்தும் கொரோனா மருந்தாக விற்பனை செய்து வருகிறார்.
அவரிடம் மருந்து வாங்க மக்கள் அனைவரும் கூட்டம், கூட்டமாக திரண்டு வந்த நிலையில், கொத்தையா என்ற ஆசிரியரும், கொரோனாவை விரட்ட கண்களில் போடப்படும் சொட்டு மருந்தை எடுத்துக் கொண்டார்.
மேலும் அவர் ஒரு வீடியோவையும் வெளி இட்டு இருந்தார்.அதில் அவர் தனக்கு ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் மட்டுமே இருக்க முடியும் என்றும், மருத்துவர்கள் தன்னை குணப்படுத்த முடியாது எனவும் கூறிவிட்டனர்.
ஆனால் நெல்லூர் மாவட்டத்தில், கண்சொட்டு மருந்து எடுத்தவுடன் மூச்சுவிடுவதில் சிக்கல் ஒன்றும் இல்லை என்றும், நன்றாக மூச்சு விட முடிகிறது என்றும், உடனே குணம் அடைந்ததாகவும், பதிவிட்டு இருந்தார்.
அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வந்த நிலையில், திடீரென்று அவருக்கு மீண்டும் மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
தொடர்ந்து ஆக்சிஜன் குறைந்து வந்ததால், இரண்டு நாட்களாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில், அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அதன் காரணமாக கண்ணுக்கு தரும் சொட்டு மருந்தை தடை செய்து, வாய் வழியே சாப்பிடும் மருந்துக்கு மட்டும் அரசு அனுமதி அளித்துள்ளது.மேலும் அவர் குழுவிலேயே மூன்று நபர்கள் கோரோனாவினால் பாதிக்கப் பட்டதாக கூறுகின்றனர்.