நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல்! மத்திய அரசு எச்சரிக்கை!

Photo of author

By Sakthi

நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல்! மத்திய அரசு எச்சரிக்கை!

Sakthi

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 12,249 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் இது நேற்றைய பாதிப்பை விடவும் அதிகம் என்று சொல்லப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 9,862 பேர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்திருக்கிறார்கள். இதுவரையில் ஒட்டுமொத்தமாக 4,27,25,055 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள். நாடு முழுவதும் இன்று மட்டுமே 13 பேர் இந்த நோய் தொற்றுக்கு பலியாகியிருக்கிறார்கள்.

இதுவரையில் ஒட்டுமொத்தமாக இந்த நோய் தொற்றுக்கு சுமார் 5,24,903 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியிருக்கிறார்கள். நாடுமுழுவதும் தற்போது வரையில்,81,687 பேர் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவரின் சதவீதம் 98.60 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.21 என இருக்கிறது. நோய்த்தொற்று பரவல் தினசரி சதவீதம் 3.94% என்றும், வாராந்திர சதவீதம் 2.90 சதவீதமாகவும், இருக்கிறது.

நாட்டில் கேரளா, புதுடெல்லி, மகாராஷ்டிரா, போன்ற மாநிலங்களில் நோய்த் தொற்று பரவல் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டி இருக்கின்ற மத்திய அரசு, தேவைப்படும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியிருக்கிறது.