தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் நோய் தொற்று பாதிப்பு!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு தொடர் பரவல் சற்று அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. அதாவது வெகு நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் நோய்த்தொற்றின் ஒரு நாளைய பாதிப்பு 100 ஐ கடந்திருக்கிறது.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில் தமிழகத்தில் ஒரே நாளில் 14,049 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 139 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஒட்டுமொத்த நோய் தொற்று பாதிப்பு என்பது 34,55,613 என பதிவாகியிருக்கிறது. நோய்த்தொற்று பாதிப்புகளிலிருந்து குணமடைந்த நபர்களின் எண்ணிக்கை 52 என இருக்கிறது. ஆனால் இதுவரையில் இந்த நோய் தொற்று பாதிப்பால் தமிழகத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரையில் நோய் தொற்று பாதிப்பு காரணமாக, 38,025 பேர் பலியாகி இருக்கிறார்கள். நேற்று மட்டும் தலைநகர் சென்னையில் 58 பேருக்கும், செங்கல்பட்டில் 59 பேருக்கும், நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு தமிழகத்தில் மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் நோய் தொற்று பாதிப்பு 100 ஐ கடந்திருக்கிறது. வடமாநில மாணவர்கள் காரணமாக, நோய்த் தொற்று நோய் பரவி வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்த சூழ்நிலையில், நோய் தொற்று பாதிப்பு அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.