நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை! முதலமைச்சர் இன்று அவசர ஆலோசனை!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் சென்ற வருடம் செப்டம்பர் மாதம் முதல் மெல்ல, மெல்ல, குறையத் தொடங்கியது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் வழக்கம் போல செயல்பட தொடங்கினார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ ,மாணவிகள், நேரடி வகுப்புகளில் பங்கேற்றார்கள்.

இந்த நிலையில், தற்போது இந்த நோய்த்தொற்று பரவல் மீண்டும் மெல்ல, மெல்ல, அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

100க்கு கீழே இருந்த நோய் தொற்று பாதிப்பு தற்சமயம் அதிகரித்திருக்கிறது. இதில் நேற்று தமிழ்நாட்டில் தினசரி நோய் தொற்று பாதிப்பு 200ஐ கடந்தது.

இந்த சூழ்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நோய்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

இதில் தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது