அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த வழக்கறிஞர்! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Photo of author

By Sakthi

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சார்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் நோய் தொற்று வைரஸ் பரவலை தடுப்பதற்கு அறிவிக்கப்பட்ட இருக்கின்ற பொது ஊரடங்கு காரணமாக, பாதிக்கப்பட்டு இருக்கின்ற மக்களுக்கு உதவி புரியும் விதமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் தருவதாக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

அதில் முதல் தவணையாக 2000 ரூபாய் வரும் 15ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது. தற்சமயம் தமிழ்நாட்டில் இரண்டு கோடியே 77 லட்சத்து 86 ஆயிரத்து 950 குடும்பங்கள் ரேஷன் அட்டைகள் வைத்திருக்கின்றன. முதல் தவணையாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. இந்த இடத்தில் அரிசி பெறுபவர்களின் அட்டைதாரர்கள் மத்திய அரசு மற்றும் மாநில அரசு அதிகாரிகள் ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கி அதிகாரிகள், அரசு ஆசிரியர்கள், போன்றவர்களும் இதில் இருக்கிறார்கள்.

இவர்களைப் போன்று இருப்பவர்களுக்கு ஊரடங்கு சமயத்தில் எந்தவிதமான சம்பள பிடித்தமும் செய்யப்படுவது கிடையாது. ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக வருமான இழப்பு ஏற்படுவதில்லை. தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட நிதி உதவி ஊரடங்கு காரணமாக, பாதிக்கப்பட்ட வாடகை கார், ஆட்டோ மற்றும் சிற்றுந்து, ஆம்னி பேருந்து, தனியார் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள், நடைபாதை வியாபாரிகள், தனியார் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் தான் இந்த ஊரடங்கு காரணமாக, பொருளாதார ரீதியாக மிகவும் பாதிப்படைந்து இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆகவே அவர்களுக்குத்தான் பொருளாதார ரீதியாக பெரும் உதவி தேவைப்படுகிறது. ஆகவே மத்திய, மாநில அரசு துறைகளில் பணிபுரியும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சையைத் தவிர்த்து உதவி தொகை வழங்குவதற்கு தடை விதிக்கவேண்டும், வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கின்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 மற்றும் அதைவிட கூடுதலாக நிதி உதவி வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி உள்ளிட்டோர் விசாரணை செய்தார்கள். அதன் பிறகு இந்த மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைத்திருக்கிறார்கள்.