இங்கிலாந்து நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று! கட்டுப்பாடுகள் அதிகரிப்பு?

0
69

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்சமயம் உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அனைத்து நாடுகளும் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். அந்த விதத்தில் இந்தியாவில் இந்த நோய்த்தொற்று கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கண்டறியப்பட்டது. அதிலிருந்து இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அதோடு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன தற்சமயம் இந்த நோய் தொற்று பாதிப்பு மெல்ல,மெல்ல குறைந்து வருகிறது.

அதேபோல தடுப்பூசி போடும் பணி மிக வேகமாக நடந்து வருகிறது .ஆனால் தற்சமயம் புதிய வகை நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்தில் மறுபடியும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகின்றது சென்ற ஒரு வார காலத்தில் மற்றும் இங்கிலாந்தில் 5 லட்சத்து 13 ஆயிரம் பேர் இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது கடந்த வாரம் பதிவான பாதிப்பு எண்ணிக்கையை விட 44 சதவீதம் அதிகம் என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டம், உள்ளிட்டவை வர உள்ளதால் இந்த நோய்த்தொற்று மேலும் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். அதோடு ஒரு நாளைக்கு 6 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனை தவிர்ப்பதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்து வருகிறார்களாம்.

இதற்கு நடுவில் புதிதாக உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் நோய்த்தொற்று பரவல் இங்கிலாந்து நாட்டில் அதிக அளவில் பதிவாகியிருக்கிறது, இது தற்சமயம் பதிவாகும் பாதிப்புகளில் 60% புதியவகை பாதிப்புகள் தான் என்று தெரிவிக்கிறார்கள் இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் மிக விரைவில் இங்கிலாந்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார்.

லண்டன் நகர மேயரும் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து கூறியிருப்பதால் இங்கிலாந்தில் மறுபடியும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது. இதற்கு இடையே கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துவதற்காக எதிர்ப்பு தெரிவித்து லண்டன் நகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.