கொரோனா பாதித்தோருக்கு இதுவும் அவசியம் வரும்! விஞ்ஞானிகள் கருத்து! மத்திய அரசு செய்யுமா?
நாடு முழுவதிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பல பயங்கரமான அசம்பாவிதங்களை ஏற்படுத்துகிறது.இந்த நேரத்தில் கொரோனா தாக்கியவர்களை ஆராய்ந்து பார்த்த டாக்டர்கள் புதிய தகவலை கூறியிருக்கிறார்கள்.
என்னவெனில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களோ, கொரோனா தாக்கியவர்களை ஆராய்ந்ததில் அவர்களை மியூகோர்மைகோசிஸ் எனும் கருப்பு பூஞ்சை நோய் தாக்குகிறது என்பதை கண்டறிந்துள்ளனர்.
இதுவும் ஒரு அறியவகை தொற்றுநோய் ஆகும்.இது பொதுவாக மண், தாவரங்கள், அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றில் இருக்கும் பூஞ்சையினால் உருவாகிறது என்றும், இந்த பூஞ்சை மனிதர்களின் சைனஸ்கள், மூளை, மற்றும் மூளை ஆகியவற்றை மிகவும் தாக்குகின்றன.
இது மிகவும் உயிருக்கு ஆபத்தான நோய் ஆகும்.இது கொரோனா நோயாளிகளை பொறுத்த மட்டில், அவர்களுக்கு உயிரை காக்க தரப்படும் ஸ்டீராய்டு மருந்துகளால் இவை மனித உடலில் தூண்டப்படலாம், எனவும் கூறுகின்றனர்.
ஸ்டீராய்டுகளை பொறுத்த மட்டில் இது கொரோனா நோயாளிகளின் நுரையீரல் வீக்கத்தை குறைக்கவும், கோரோனாவை எதிர்க்க உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் போது, சில சேதங்களை குறைக்க உதவுகிறது.
ஆனால், அவை நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து நீரிழிவு நோயாளிகளுக்கும், நீரிழிவு நோய் இல்லாதவருக்கும் இரத்த சர்க்கரையின் அளவை அதிகரித்து விடுவதாகவும் கூறப்படுகிறது.
அப்படி நோய் எதிர்ப்பு சக்தி குறைவது தான் கொரோனா நோயாளிகளை தாக்கும் மியூகோர்மைகோசிஸ் என்ற பிரச்சனைக்கு காரணமாக இருக்கலாம் எனவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இந்த நோயை பற்றி அறிந்ததும் மத்திய அரசு இதற்கான மருந்து தயாரிப்புகளை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய உரம் மற்றும் ரசாயனங்கள் அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், கோரோனாவிற்கு பிறகு வரும் இந்த நோய் தொற்றுக்கு, ஆம்போடெரிசின்-பி என்ற மருந்து பரிந்துரைக்கப்படுவதாகவும்,இந்த மருந்துக்கான தேவை அதிகரித்து உள்ளதாகவும் கூறியிருக்கிறது.
இந்த மருந்தின் உற்பத்தியை அதிகரிக்க மருந்து உற்பத்தியாளர்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.மேலும் அதிக அளவு இறக்குமதி செய்யவும், உற்பத்தி செய்யவும் பல முயற்சிகளை செய்து வருகிறது.
இந்த மருந்தின் கையுருப்பு நிலையையும், தேவையையும் ஆராய்ந்து வரும் 31 த்தேதி வரை அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் கிடைக்கும் படி செய்துள்ளது.
இந்த மருந்தை அனைத்து மாநிலங்களும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சம அளவில் கிடைக்க வழி செய்ய வேண்டும், என்று கேட்டுக்கொண்டுள்ளன.அனைத்து மாநிலங்களிலும், இந்த மருந்தை எளிய வகையில் பெற்றிட வழிவகை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளன.
கோரோனாவை தொடர்ந்து இந்த கருப்பு பூஞ்சை நோய் தொற்று மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.