போட்டியின் குறுக்கே பாய்ந்த கொரோனா தொற்று! முழுமையாக ரத்து செய்யப்பட்ட போட்டி!

0
112

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது, இந்த தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இலங்கை வங்காளதேச அணிகள் சந்தித்தனர். இந்த தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக வங்காளதேச அணி முதலில் பேட் செய்தது. பங்களாதேஷ் அணி 37.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்திருந்த சமயத்தில் நடுவர்களில் ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.

போட்டிக்கு முன்னர் வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள், என்று எல்லோருக்கும் வழக்கம் போல நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. போட்டி நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் அதன் முடிவுகள் வெளிவந்தன, இதில் நடுவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதன் காரணமாக, ஆட்டம் ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதிப் போட்டியில் இந்தியா, வங்காளதேச அணிகள் மற்றும் பாகிஸ்தான், இலங்கை அணிகள் உள்ளிட்ட அணிகள் மோத இருக்கின்றன ஏற்கனவே இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleநீட் தேர்வுக்கு விலக்கு வழங்கப்படுமா? திமுகவின் எம்பிக்கள் அமித்ஷாவுடன் இன்று சந்திப்பு!
Next articleஅதிர்ச்சி! இந்தியாவில் புதிய வகை நோய் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 781 ஆக அதிகரிப்பு!