கொரோனா மூன்றாம் அலை!! யாரையெல்லாம் பாதிக்கும்!! அடுத்த 100 நாள்கள் முக்கியமானவை!!

Photo of author

By Preethi

கொரோனா மூன்றாம் அலை!! யாரையெல்லாம் பாதிக்கும்!! அடுத்த 100 நாள்கள் முக்கியமானவை!!

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்துக் வருகிறது. இந்தியாவில் ஏற்கனவே இரண்டாம் அலையின் வீரியம் குறைந்தபாடில்லை. இதற்குள் மூன்றாவது அலையின் அச்சம் தொடங்கிவிட்டது. மேலும் மூன்றாவது அலையை எதிர்நோக்கியுள்ள இந்தியாவிற்கு அடுத்த 100 நாள்கள் முக்கியமானவை என்று மத்திய அரசின் அங்கமான நிதி ஆயோக்கின் சுகாதாரத்துக்கான உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவை தவிர்த்து மற்ற உலக நாடுகள் அனைத்தும் நல்ல நிலையில் இருந்து மோசமான நிலைக்கும் மோசமான மற்றும் மிகவும் மோசமான நிலைக்கும் தள்ளப்பட்டு உள்ளது.

இந்தியாவில் இரண்டாவது அலை பல்வேறு இடங்களில் குறைந்திருந்தாலும் இன்னும் சில மாநிலங்கள் 100க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகிறது. மூன்றாம் அறையை பற்றிய தகவல்களையும் எச்சரிக்கைகளையும் அலட்சியப்படுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார்.கொரானா தொற்றிக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவிற்கு அடுத்த 100 முதல் 125 நாள்கள் மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களை இந்த மூன்றாம் அலை கொரோனா தோற்று மிகவும் பாதிக்கும் என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பு (CDC) எச்சரித்துள்ளது. இதுகுறித்து CDC அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் ரோஷல் வேலென்ஸ்கி வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறியதாவது: “நாட்டில் எந்தப் பகுதியிலெல்லாம் குறைவான எண்ணிக்கையிலானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களோ அந்தப் பகுதியிலெல்லாம் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பகுதிகளில் பாதிப்பு குறைவாக உள்ளது. தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் இடையில் பதிப்பு அதிகமாக உள்ளது . எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்திகொள்ள வலியுறுத்தப்படுகின்றனர்.