தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சீனாவை பிறப்பிடமாக கொண்ட கொரோனா தொற்று இந்தியாவில் ருத்ரதாண்டவம் ஆடிவருகின்றது அனேக மாநிலங்களில் இந்த வைரஸ் தொற்று மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு பல பிரபலங்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் என்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டு வந்திருக்கிறார்கள் சில அமைச்சர்கள், நாடாளுமன்ற, உறுப்பினர்கள், ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் தற்போது இந்த வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்து விடுகின்றது கடந்த மே மாதம் மற்றும் ஜூன் மாதங்களில் ஒப்பிடும்போது இப்போது இந்த வைரஸ் பரவல் குறைவாகவே இருக்கின்றது கொரோனா வைரஸ் இரண்டாம் கட்ட அதையும் இருப்பதன் காரணமாக மிகுந்த எச்சரிக்கையுடன் மக்கள் இருக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது இதனைத் தொடர்ந்து அவர் சென்னை யில் இருக்கின்ற ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் அதோடு அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.