ரஷ்யாவில் 3 லட்சத்தை தாண்டிய நோய்தொற்று பலி எண்ணிக்கை!

Photo of author

By Sakthi

நோய் தொற்றால் அதிகமாக பாதிப்படைந்த நாடுகளின் வரிசையில் ரஷ்யா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. ரஷ்யாவில் கடந்த சில மாதங்களாக நோய் தொற்று தாக்கம் வேகம் எடுத்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், ரஷ்யாவில் நோய்த்தொற்று காரணமாக, பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 1.03 கோடியை கடந்து இருக்கிறது.

நோய்தொற்று பரவலுக்கு 1002 பேர் பலியாகி இருக்கிறார்கள், ஆகவே அங்கே நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி இருக்கிறது.
.

அந்த நாட்டில் நோய் தொற்றிலிருந்து 91 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள் தற்சமயம் 8.78 லட்சத்திற்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.