சீன நாட்டில் வெளியான நோய்த்தொற்று பரவல் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது கடந்த 2019ஆம் ஆண்டு சீன நாட்டின் வூஹான் நகரில் இந்த நோய்த்தொற்று பரவல் ஆரம்பித்தது. அதன்பிறகு உலகம் முழுவதும் சுமார் 221 நாடுகளுக்கு இந்த நோய்த் தொற்று பரவி அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், இந்த நோய்த்தொற்று பரவல் தொடங்கி ஒரு வருட காலம் ஆகிவிட்ட பின்னரும் கூட அந்த நோய்களின் தாக்கம் இதுவரையிலும் குறையவில்லை. உலகம் முழுவதும் இந்த நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் அனைத்து நாடுகளிலும் செலுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும் கூட இந்த நோய் தொற்றிக் வீரியம் குறைந்தபாடில்லை.
இந்த நோய் தொற்று பாதிப்புகள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும், பிரேசில், பிரிட்டன், ரஷ்யா, உள்ளிட்டவைகள் முதல் ஐந்து இடங்களில் இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், உலகம் முழுவதும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு பலியானோரின் எண்ணிக்கை 52 லட்சத்தை கடந்து இருக்கிறது.
நோய்தொற்று பரவலால் பாதிப்புக்கு உள்ளானவர் எண்ணிக்கை 26.08 கோடியை தாண்டி இருக்கிறது. அதோடு நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 23.56 கோடியைத் தாண்டியிருக்கிறது.
நோய்தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் 2 கோடிக்கும் அதிகமான ஒரு சிகிச்சை பெற்று வருகிறார்கள் சிகிச்சை பெறுபவர்களின் 83 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.