மகிழ்ச்சி! 47 கோடியை கடந்த நோய்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை!

0
132

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் பின்னர் உலகம் முழுவதும் பரவிய மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் சுமார் 220 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவிய இந்த நோய்த்தொற்று பரவல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

முதலில் இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவது எப்படி என்று தெரியாமல் தவித்து போன உலக நாடுகள் பின்னர் அந்த நோய் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளை கண்டுபிடிக்க தொடங்கினர். அதன்பிறகு மெல்ல, மெல்ல, இந்த நோய் பரவல் குறைய தொடங்கியது.

இந்த நோய்த் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், தற்போது இந்த நோய்த்தொற்று பரவல் உருமாற்றமடைந்து இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதன்படி உலகம் முழுவதும் நோய்த்தொற்று பரவலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,63,70,803 என அதிகரித்திருக்கிறது. இந்த நோய்த் தொற்று பரவல் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களில் 3,90,492 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து இதுவரையில் 47,10,90,492 பேர் குணமடைந்திருக்கின்றார்கள். ஆனாலும் இந்த நோய் தொற்று பாதிப்பு காரணமாக, உலகம் முழுவதும் இதுவரையில் 62,74,303பேர் பலியாகியிருக்கிறார்கள்.

Previous articleஐபிஎல் கிரிக்கெட் போட்டி! குஜராத்தை ஊதித்தள்ளிய மும்பை அணி!
Next articleதிடீரென்று அரசு பேருந்தில் ஏறிய முதலமைச்சர் பதறிப்போன நடத்துனர்! மகிழ்ச்சியடைந்த பயணிகள்!