மகிழ்ச்சி உலகளாவிய நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 51.22 கோடி!

0
116

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் நோய்த்தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவல் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, உள்ளிட்ட வல்லரசு நாடுகளையும் விட்டுவைக்கவில்லை.

அதிலும் அமெரிக்காவை கடுமையாக இந்த நோய் பாதித்திருக்கிறது, தற்போது வரையில் அந்த நாடுதான் முதலிடத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல இந்தியா இந்த நோய் பாதிப்பில் 2வது இடம் வகிக்கிறது.

இந்த நோய்த்தொற்று பரவலுக்கு காரணமாக இருந்தது சீனா தான் அந்த நாட்டில்தான் கடந்த 2019 ஆம் வருடம் முதன் முதலாக இந்த நோய் பரவல் கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது இந்த நோய் பரவல் உலக நாடுகளிடையே உலக நாடுகளிடையே பரவி மிகப்பெரிய பாதிப்பையும், அச்சத்தையும், ஏற்படுத்தி வருகிறது.

இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவாக நடைபெற்று வந்தாலும் கூட நோய் தொற்று உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் உலகம் முழுவதும் இந்த நோய்த் தொற்று பரவ காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,96,82,023 என அதிகரித்திருக்கிறது.

இந்த நோய் பரவல் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களில் இதுவரையில் 2,10,64,296 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நோய் தொற்று பரவல் காரணமாக, இதுவரையிலபாதிக்கப்பட்டவர்களில் 51,22,88,133பேர் குணமடைந்திருக்கிறார்கள்.

இருந்தாலும், கூட இந்த நோய்த்தொற்று பரவல் காரணமாக, உலகம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 63,29,594 என அதிகரித்திருக்கிறது.

Previous articleதிருப்பதியில் நடந்த விதிமீறல்! பகிரங்க மன்னிப்பு கேட்டார் விக்னேஷ் சிவன்!
Next articleநோய் தொற்று தடுப்பு நடவடிக்கை! முதலமைச்சர் இன்று அவசர ஆலோசனை!