30 கோடியை நெருங்கும் உலகலாவிய நோய் தொற்று பாதிப்பு!

0
138

சீனா நாட்டில் கடந்த 2019 ஆம் வருடம் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் தற்சமயம் உலகம் முழுவதும் சுமார் 221 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி இந்த நோய் தொற்றும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடந்து வருகின்ற சூழ்நிலையிலும், நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், உலகம் முழுவதும் நோய்த்தொற்று காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 கோடியே 80 லட்சத்து 37 ஆயிரத்து 280 ஆக அதிகரித்திருக்கிறது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 58 லட்சத்து 6 ஆயிரத்து 915 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள், நோய் பாதிப்பில் இருந்து இதுவரையில் 25 கோடியே 67 லட்சத்து 48 ஆயிரத்து 715 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். இருந்தாலும் கூட நோய்த்தொற்று பரவலால் உலகம் முழுவதும் இதுவரையில் 54 லட்சத்து 83 ஆயிரத்து 550 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

Previous articleசைலேந்திரபாபு உத்தரவு எதிரொலி! ஒரே மாதத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!
Next articleதமிழகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும்! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்புத் தகவல்!