சீனா நாட்டில் முதன் முதலாக தோன்றிய நோய்த்தொற்று பரவல் தற்சமயம் உலகம் முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிரதேசங்களிலும் பரவி உலக அளவில் மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் அமெரிக்கா, ரஷ்யா, உள்ளிட்ட மாபெரும் வல்லரசு நாடுகளும் திணறிப்போய் இருக்கின்றன.
அதோடு அங்கே பல ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து அந்த நாடுகளில் பொதுமக்கள் ஊடகங்களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தார்கள். இதன் காரணமாக, அந்த நாட்டு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அரசு நிர்வாகம் உள்ளிட்டவைகள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நின்றனர்.
இந்த நிலையில், ஒரு வழியாக இந்த நோய் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு தற்சமயம் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அந்தந்த தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு தடுப்பூசிகள் அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, நோய்த்தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது.
இந்த சூழ்நிலையில், உலகம் முழுவதும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,57,69,552 ஆக அதிகரித்திருக்கிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 7,14,69,308 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், இந்த நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து இதுவரையில் 33,84,45009 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இருந்தாலும் நோய் தொற்றால் உலகம் முழுவதும் இதுவரையில் 58,55,235 பேர் பலியாகி இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.