41.12 கோடியாக உயர்ந்தது உலகளாவிய நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை!

Photo of author

By Sakthi

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்த்தொற்றுகள் அதன் பின்பு மெல்ல, மெல்ல, உலக நாடுகளுக்கு பரவி உலக நாடுகளில் சுமார் 220 மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்த நோய் தொற்று நோய் பரவலுக்கு காரணமாக இருந்த சீனாவின் மீது உலக நாடுகள் அனைத்தும் பயங்கர கோபத்தில் இருந்து வருகின்றன.

அதோடு இந்த நோய் தொற்றுப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர் தொற்று நோய்களுக்கு எதிராக மிகவும் சிறப்பாக செயல்பட்டு அவற்றுக்கான தடுப்பூசிகளை கண்டுபிடித்த இங்கிலாந்தை சேர்ந்த ஆக்ஸ்போர்டு மருத்துவ பல்கலைக்கழகத்தில் முதல் முதலாக இந்த நோய் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், உலகம் முழுவதும் நோய்த்தொற்று பரவல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 47,58,40,668 என அதிகரித்திருக்கிறது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,84,85,327 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நோய்தொற்று பாதிப்பிலிருந்து இதுவரையில் 41,12,27,923 பேர் குணமைந்திருக்கிறார்கள் இருந்தாலும் நோய்த்தொற்று பரவல் காரணமாக உலகம் முழுவதும் இதுவரையில் 64,27,418 பேர் பலியாகியிருக்கிறார்கள்.