TVK DMK: தமிழகத்தில் புதிதாக உதயமாகியுள்ள கட்சி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் இக்கட்சி உலகம் முழுவதும் அறியப்பட்டுள்ளது. திமுக தான் தனது அரசியல் எதிரி என்று கூறிய விஜய், திமுகவை வீழ்த்துவதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறார். இந்நிலையில் திமுக ஆட்சியில் ஏற்பட்ட ஊழல் காரணமாக விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.
திமுக 2021யில் ஆட்சியை பிடித்ததிலிருந்து, திமுக அமைச்சர்கள் மீது பல்வேறு முறைகேடு வழக்குகள் பதிவாகியுள்ளன. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிமுகவில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, பல பேரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. மேலும், டாஸ்மாக் நிறுவனம் தமிழக அரசிடம் உள்ள நிலையில், போலி கொள்முதல் மூலம் கணக்கில் வராத 1,000 கோடிக்கு மேல் பணத்தை ஈட்டியதாக புகார் எழுந்தது. ரயில்வே மற்றும் டெண்டர் ஒப்பந்தங்களில் 40,000 கோடி வரை மோசடி செய்ததாகவும் புகார் எழுந்தது.
இதனை தொடர்ந்து 2025இல் திமுக ஆட்சியில் குடிநீர் திட்டம் இடைநிறுத்தம் செய்யபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின . மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. குடிநீர் வரி, கடை வரி, குப்பை வரியிலும் முறைகேடு செய்தது அரசு நடத்திய விசாரணையில் வெளிவந்துள்ளது. கடந்த ஆட்சியில் ஏற்பட்ட சில அதிருப்திகள், மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகியவை திமுகவின் பலத்தை குறைத்திருப்பதாக சர்வே தெரிவிக்கிறது. இதனால், திமுகவால் தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வர முடிவது கடினம் எனவும், இதனால் மாற்றத்தை விரும்பும் மக்கள் விஜய் பக்கம் செல்ல வாய்ப்பிருக்கிறது என்று சர்வே முடிவுகள் கூறுகின்றன.

