அதிமுக எம்எல்ஏ-க்கு கொரோனாத் தொற்று உறுதி..? அதிர்ச்சியில் அதிமுக உறுப்பினர்கள்?

Photo of author

By Pavithra

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மேலும் ஒரு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிமுகவினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரது மகள், மருமகன், பேத்தி ஆகிய மூன்று பேருக்கும் கடந்த வாரம் மதுரையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்தனர்.பின்னர் அம்மூன்று பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து எம்எல்ஏ அவர்களின் மனைவி, மகன், மருமகள் மற்றும் எம்எல்ஏ விற்கும் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.இதில் இன்று எம்எல்ஏ அர்ஜுனன் அவர்களுக்கு தொற்று உறுதிச் செய்யபட்டது.

முன்னதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் உள்ளிட்ட இரண்டு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும்,4 திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை கோவை மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ அன்பழகன் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.