ரொம்ப டார்ச்சர் கொடுக்குறாங்க!.. தவெக கட்சியை விட்டு விலகினார் வைஷ்ணவி!..

0
108
tvk vaishanavi

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர் வைஷ்ணவி. இவர் கோவையை சேர்ந்தவர். மக்கள் நலப்பணித்திட்டத்தில் ஆர்வமுள்ள வைஷ்ணவி ஏற்கனவே தனது சொந்த பணத்தில் மக்களுக்கு உதவிகளை செய்து வந்தார். விஜய் கட்சி துவங்கிய பின்னர் அதில் தன்னை இணைத்துக்கொண்டார்.

மேலும், இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் தவெக பற்றி செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இந்நிலையில்தான், திடீரென இப்போது தவெக கட்சியிலிருந்து விலகியுள்ளார். கட்சியில் தனக்கு அங்கீகாரமே இல்லை எனவும், தனது வளர்ச்சியை கண்டு மாவட்ட நிர்வாகிகள் பொறாமைப்படுவதோடு, பேட்டி கொடுக்கக் கூடாது, போஸ்ட் போடக்கூடாது என தன்னை மிரட்டுவதாகவும் பகீர் புகாரை அவர் கூறியிருக்கிறார்.

vasishnavi

மூன்று மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். நீயெல்லாம் ஒரு பொண்ணா?. உனக்கெல்லாம் எதுக்கு அரசியல். ஒழுங்கா வீட்டுக்குள்ளயே இரு. அரசியலை உனக்கு என்ன தெரியும் என வசவு வார்த்தைகள் நசுக்கப்படுகிறேன். என்னுடைய மக்கள் பணிக்கு சிலர் முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது. மக்களுக்கான சேவையை எந்த தளத்தில் இருந்தும் நான் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன். மாநாடு, பூத் கமிட்டி நிகழ்ச்சி உள்ளிட்ட எந்த நிகழ்வுக்கும் எனக்கு அழைப்பு இல்லை. இன்று முதல் நான் என்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து முழுமையாக விடுவித்துக்கொள்கிறேன். என்னுடன் பணியாற்றிய அனைத்து தொண்டர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்’ என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.

notice

ஏற்கனவே, தலைமையை சந்திக்க கூட புஸ்ஸு ஆனந்த் தன்னை அனுமதிக்கவில்லை என நடிகர் தாடி பாலாஜி புகார் கூறியிருந்த நிலையில் தற்போது வைஷ்ணவியும் கட்சியிலிருந்து விலகியிருப்பது தவெகவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

notice

Previous articleஇராணுவ எச்சரிக்கை மீறி செயல்பட்ட பத்திரிக்கையாளர் மீது நெட்டிசன்கள் குற்றச்சாட்டு!!
Next articleநான் காசு கேட்டேனா?!. தயாரிப்பாளர் யாருன்னே தெரியாது!. யோகிபாபு சொன்ன விளக்கம்.