கடந்த சில வருடங்களாக கொரோனா என்ற உயிர்க்கொல்லி நோய் உலகம் முழுவதும் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது, இதனைக் கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் உலக நாடுகளின் நடவடிக்கைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தது இந்தியாதான் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஏனெனில் இந்தியா இந்த நோய் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதை கவனித்த உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை பின்பற்றத் தொடங்கினர். ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து முதலில் தன்னை சுயபரிசோதனை செய்து கொண்டது இந்தியா தான் அதன் விளைவாக நோய் தொற்று பாதிப்பு மெல்ல, மெல்ல, குறைய தொடங்கியது.
இதனை கவனித்த அமெரிக்கா உள்ளிட்ட உலக வல்லரசு நாடுகள் அனைத்தும் இந்தியாவின் இந்த வழிமுறையை பின்பற்ற தொடங்கியது.
மேலைநாடுகளில் ஒருவரை வரவேற்பது என்றாலும் சரி, ஒருவரை வாழ்த்துவது என்றாலும் சரி, கைகுலுக்குவது தான் வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த வழக்கம் இந்தியாவிற்கும் பொருந்தும் ஆனால் தமிழகத்தை பொறுத்த வரையில் ஒருவரை தனி மாண்போடு வரவேற்க வேண்டும் என்று சொன்னால் இருகரம் கூப்பி வணங்கி தான் அவர்களை வரவேற்பார்கள்.
இந்த நிலையில், ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டாலோ அல்லது ஒருவர் மீது ஒருவர் கை வைத்துக் கொண்டாலும் இந்த நோய்த்தொற்று பரவக்கூடும் என்ற காரணத்தால், சமூக இடைவெளி மிகவும் முக்கியம் என்று உலக நாடுகள் அனைத்தும் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், இந்தியாவை தவிர்த்து மற்ற மேலை நாடுகளும் தமிழகத்தின் இந்த கைகூப்பி வரவேற்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டனர் என்று சொன்னால் அது மிகை ஆகாது. காரணம் சமூக இடைவெளி ஒவ்வொருவரின் இடையேயும் இருக்க வேண்டும் என்பதே உலக நாடுகளின் கருத்தாக இருந்து வந்தது.
அந்த கருத்திற்கு ஏற்றார் போல ஒருவரை ஆரத் தழுவாமல் அல்லது கை கொடுக்காமல் வரவேற்பது என்றால் கை கூப்பி தான் வரவேற்கமுடியும் என்ற முடிவுக்கு உலகநாடுகள் வந்தனர்.இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் அனைத்தும் தமிழரின் பெருமையை பின்பற்றத் தொடங்கினார்கள்.
இந்த நிலையில் தற்சமயம்கொரோனாவின் உருமாற்றம் பெற்ற புதிய வகை நோய் தோற்று தென்னாப்பிரிக்காவின் தொடங்கி தற்போது பல உலக நாடுகளில் பரவி இருக்கிறது. இந்த நோய்த்தொற்று சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நோய் தொற்றால் தமிழகத்தில் சுமார் 600 பேர் பாதிப்பு அடைந்து இருக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரையில் 34 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில், ஐநாவின் பொது செயலாளர் ஆண்டனி தன்னுடைய வலைதளப் பக்கத்தில் நோய்த்தொற்று மனித இனம் எதிர்கொள்ளும் கடைசி தொற்றாக இருக்காது. எதிர்காலத்தில் இதுபோன்ற நெருக்கடி ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும் போதே அடுத்த தொற்றுக்கு நாம் தயாராக வேண்டும் என்று சர்வதேச நோய் தொற்றுக்கான தயார்நிலை தினத்தில் தொற்றுநோய் மீது கவனம் செலுத்தி போதுமான நடவடிக்கை மேற்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
டிசம்பர் மாதம் 27ம் தேதி சர்வதேச புற்றுநோய் தயார்நிலை தினம் ஆகவே அதனை முன்னிட்டு ஐநாவின் பொது செயலாளர் இந்த கருத்தை கூறியிருக்கிறார்.
நோய் தொற்றுக்கான தயார்நிலை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை பரிந்துரைக்க வேண்டியதன் அவசியத்தை ஐநா சபையும், உலக சுகாதார அமைப்பும் புரிந்து கொண்டதை அடுத்து சென்ற வருடம் முதல் டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி சர்வதேச தொற்றுநோய் தயார்நிலை தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.