அதிர்ச்சி! சோனியா காந்திக்கு நோய்த்தொற்று உறுதி!

Photo of author

By Sakthi

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அவர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

சோனியா காந்தி கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை சந்தித்து உரையாடி வருகின்ற சூழ்நிலையில், நேற்றையதினம் அவருக்கு லேசான காய்ச்சல் உண்டானது.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நோய் தொற்று பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவர் தற்சமயம் குணமடைந்து வருவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்திருக்கிறது.

ஆனால் தற்போது நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சோனியா காந்தி கடந்த சில தினங்களாகவே அந்த கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலரை சந்தித்து உரையாடி இருக்கிறார்.

ஆகவே அவரை இதுவரையில் யார் யாரையெல்லாம் சந்தித்தார்கள் என்பது தொடர்பாக விசாரிக்கப்பட்டு அவர்களுக்கும் நோய்த்தொற்று பரிசோதனையை மேற்கொள்ளலாம் என்று தெரிகிறது