தமிழகத்தில் தேர்தல் பணி விறுவிறு! அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையர்!

Photo of author

By Sakthi

கொரோனா தொற்றின் காரணமாக வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும், தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல் அல்லது விடுபடாமல் இருக்க வேண்டும் அதற்கு உரிய நடவடிக்கை எடுத்திடுக என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி இருக்கின்றது.

நேற்றைய தினம் தலைமைச்செயலக வளாகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அதன் பெயரில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடந்தது.

சி பி ஐ எம் சார்பாக மாநில மாநிலக் குழு குழு உறுப்பினர்கள் ஆறுமுக நயினார், மற்றும் ராஜசேகரன், ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

தமிழ்நாட்டில் 2021 ஆம் வருடம் வாக்காளர் பட்டியலை ஜனவரி ஒன்று 2021 தகுதி நாளாக எடுத்துக்கொண்டு திருத்தி அமைப்பது குறித்து தேர்தல் ஆணையம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் சம்பந்தமாக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கியிருக்கிறார். அதன்மீது உள்ள அனைத்து கட்சிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்து இருக்கின்றார்.

அதில் ஐடி துறைகளில் இருந்து தங்களுடைய சொந்த ஊர்களுக்கு இடம்பெயர்ந்து வீட்டிலிருந்தே வேலை செய்து கொண்டிருக்கும், பல ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உடைய பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடுவதற்கான ஆபத்து இருக்கின்றது.

அதுபோன்று எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும், என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதோடு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை அனைவருக்கும் கிடைக்கும் வகையிலான நடவடிக்கை எடுத்திட வேண்டும் வாக்காளர் பட்டியலில் இருக்கின்ற புகைப்படம் தெளிவாக இருந்திட வேண்டும்.

வாக்காளர் சேர்ப்பிற்கான சிறப்பு முகாம்கள் நடை பெறுவது சம்பந்தமாக தொலைக்காட்சிகள், மற்றும் பத்திரிகைகள், மூலமாக விளம்பரங்களை கொடுத்து இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்.

கொரோனா காலத்தில் வாக்காளர்கள் இடையே ஒருவித பயம் தெரிகிறது. ஆகவே அனைவரும் வாக்களிக்கும் வகையிலான விழிப்புணர்வை மக்களுக்கு இடையில் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது .