அதிமுக-பாஜக உறவில் விரிசலா? இ.பி.எஸ்யின் இறுதி முடிவு!

0
69
crack-in-aiadmk-bjp-relationship-the-final-result-of-eps
crack-in-aiadmk-bjp-relationship-the-final-result-of-eps

A.D.M.K B.J.P: ஜெயலலிதா இறந்ததிலிருந்தே அதிமுகவில் பல்வேறு உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. அப்போது இருந்த ஒற்றுமை இப்போது இல்லை என்பதற்கேற்ப சச்சரவு தொடர்கிறது. இதனால் அதிமுக அதன் உள்வட்டாரத்தில் மட்டுமல்லாமல் எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் ஆளாக்கபட்டது. இதனை தொடர்ந்து பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டுமென்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த இ.பி.ஸ் செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கினார். இதனால் செங்கோட்டையன் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வேண்டுகோள் வைத்தார். இதனை தொடர்ந்து இ.பி.ஸ்யும் அமித்ஷாவை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் அவரும் அமித்ஷாவை சந்தித்து அதிமுக உள்விவகாரங்கள் குறித்து பேசினார்.

அப்போது அவர்கள் என்ன பேசியிருப்பார்கள் என்று ஆவலோடு காத்திருந்த நிலையில் தற்போது ஒரு புதிய தகவலும் வெளியாகியுள்ளது. அமித்ஷா பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று வலியுறித்தியதாகவும், அதற்கு இ.பி.எஸ் மறுப்பு தெரிவித்ததாகவும், கட்சியில் சேர்க்க முடியாது வேண்டுமென்றால், தே.ஜ.கூட்டணியில் சேர்த்து கொள்ளுங்கள் என்று கூறியதாகவும் தகவல் கூறுகிறது.மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா கூறியும் இ.பி.எஸ் தந்து முடிவில் உறுதியாக இருப்பது அனைவரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களை கட்சியில் இணைத்தால் அவரின் தலைமைக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தினால் தான் இபிஎஸ் அவர்களை கட்சியில் சேர்க்காமல் இருக்கிறார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறி வந்த நிலையில், இவரின் இந்த பிடிவாதம் இந்த கருத்தை உறுதி செய்வதை போல் உள்ளதென சொல்லப்படுகிறது. இதனால் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையேயான உறவு வருங்காலத்தில் எப்படி இருக்குமென்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Previous articleஅதிமுகவை காப்பாற்றியது பாஜக தான்.. இபிஎஸ்-ன் பேச்சுக்கு டிடிவி ஓபிஎஸ் பதிலடி!
Next articleஅமித்ஷாவிடம் இ.பி.எஸ் பேசியது என்ன? அதிமுகவின் ஒருங்கிணைப்பு சாத்தியமா?